பனைமரம்.

அமைப்பு:
பனைமரம் மிக உயரமான ஓங்கி உயர்ந்த நீளஉருட்டு வடிவில் இருக்கும்.ஆஆனி வேர் கிடையாது. நிறைய சல்லி வேருடன் காணப்படும்.





வகைகள்:
இது இரண்டு வகைப்படும்.ஒன்று ஆண் மரம். மற்றொன்று பெண் மரம்.
கிடைப்பவை:
பனைமரத்திலிருந்து நமக்கு குளிர் பாணம்,நொங்கு,மட்டை,விறகு, கார்த்திகை தீபத்துக்கு தேவையான ஆண்பூ,வீடு கட்ட மரம்,மற்றும் பனங்கள்ளு முதலியவை கிடைக்கிறது.
நன்மைகள்:
பனைவெல்லம் பல மூலிகை மருந்தாக பயன் படுகிறது.மட்டைகள் கூரை மேய்வதற்க்கும்,விசிறி செய்வதற்கும் பயன் படுகிறது.மரத்தின் தண்டு பகுதி மாட்டு கொட்டகை அமைக்க பயன் படுகிறது.அஜீரணம் ஆக கள்ளும்,மனித உடலை குளிர்ச்சி செய்ய பனைமரத்து பானமும் கிடைக்கிறது.பனம்பழத்தில் நொதிப்புத்தன்மை உள்ளதால் தாவரங்களுக்கு சிறந்த ஊக்கி உரமாக கிடைக்கிறது.
தீமைகள்:
பனைமரத்தின் மட்டையில் உள்ள கருக்குகள் நம் உடம்பில் பட்டால் காயம் உண்டாக்கும்.பனம்பழத்தை அதிகமாக திண்றால் பித்தத்தை ஏற்படுத்தும்.அதில் கிடைக்கும் நொங்குக்காக மரம் ஏறி அறியாமையின் காரணமாக கீழே  விழுந்துமடிந்து போனவர்களும் உண்டு.
முடிவுரை:இதுவே பனைமரத்தின் அமைப்பு,ன்மை,மற்றும்தீமைகள் ஆகும்.
பனைமரத்தை பற்றிய பாடல் ஒன்று பாடுவோம்.
தம்பித் தம்பி  என்ன வேண்டும்,பழம் வேண்டும்,என்னாப் பழம் ?வேர் பழம்.என்னா வேர்? வெற்றி வேர். என்னா வெற்றி? விறகு  வெட்டி. என்னா விறகு?மரவிறகு. என்னா மரம்?பனைமரம். என்னா பனை? தாலிப்பனை என்னா தாலி? விருந்தாளி.  என்னாவிருந்து? மண விருந்து. என்னா மணம் . பூ மனம் . என்னா பூ?   மாம் பூ..என்னா மா? அம்மா.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்