மரவகைகள்

Actions:

மரங்களின் வகைகள் மற்றும் பயன்கள்.

முகப்புரை:

அன்பும், பன்பும்,பாசமும் நிறைந்த எனது அன்பு உயிர் சொந்தங்களுக்கு என் பனிவான முதற்கண்  வணக்கம். இன்று நாம் உலகத்தில் உள்ள மரங்களின் பயன்களும், வகைகளும்  வளர்ச்சி, மற்றும்  வளர்ப்பு முறைகளைப் பற்றி காண்போம். 

முதலில் வகைகள்:

மா, பலா,வாழை,  தெண்ணை, நாகல், முருங்கை,  வேம்பு,  நிலவேம்பு,  தேக்கு, கொய்யா, பனை, பாக்கு, பப்பாளி,  முந்திரி, சவுண்டல், மூங்கில், வாகை, வைனாறை, வேலு, கருவேப்பிலை,  கருவேலி, சவுக்கு, புங்கை மரம்,  யுகலிப்டஸ், பூவரசம்,  செம்மரை,  சாத்துக்கொடி, ஆப்பிள், இளவம்பஞ்சு, பேரீச்சை,  கிளுவை,  வண்ணி, நொனா, கொடுக்காய்ப்புளி,  இலந்தை, அகத்தி,  சப்போட்டா,  புளியமரம்,  ஆகிய மரங்கள் உள்ளன. மேலும்  பவ்வேறு வகையான மரங்களை நாம் பார்த்திருக்கலாம்.

மரங்களின் பயன்பாடுகள்:

நாட்டில் மரங்களை வளர்ப்பதால் நமக்குத் தேவையான சுவாசிக்க தேவையான காற்றை அதாவது  ஆக்ஸிஜன் கிடைக்கிறது.அதன்மூலம் மனிதனின் உடலுக்குத் தேவைப்படக்கூடிய ஆற்றலை உண்டுபண்ணக்கூடிய காய்களும்,கனிகளும், இவைகளில் இருந்து கிடைக்கிறது. இவற்றின் தண்டுப்பகுதியை அருத்து  வீடு கட்டத்தேவை படும் பொருட்களாகிய அருகால், ஜன்னல், கதவு, ஏணி,பட்டரை, தோணி, படகு, துடுப்பு,  கப்பல்,  செண்ட்ரிங் பொருட்கள், ஏர்உழும் கலப்பை, மாட்டுவண்டி, மரத்தளம், வீட்டிற்கு மேற்கூரை, அடுப்பு எரிக்கவும்,ஒரு உயிரை அழிக்ககூடிய நாட்டு மருந்தும், உண்டாக்கக்கூடிய ஆயூர்வேதிக் மருந்தும் மற்றும்  எஞ்சிய பொருள்கள் காட்டிற்கு உரமாகவும் பயனளிக்கிறது.

வளர்ச்சிகள்:

இவைகள் தானாகவும், மனிதனின் ஊக்கம் மூலமாகம் வர்கிறது.மழைநீர்  கிடைத்தாலும்,வரட்சியுடைய பாலைநிலத்திலும் வளர்ச்சி  அடையும் தன்மை  உடையது.மணல், களிமண்,  செம்மண், கரிசல்மண்,  என அனைத்து  இடங்களிலும் வளரும் தன்மை  கொண்டது.இவற்றில் நீண்ட. குறைந்த ஆயுளைக் கொண்ட மரங்கள்  இருக்கிறது.

வளர்ப்புகள்:

நமக்கு நன்மை தரக்கூடிய மரங்களை நாம் நாள்தோறும் பேணிகாக்க. வேண்டிய கட்டாயம் உள்ளது.ஏனென்றால்  அது எப்படி  நமக்கு அவசியமாக உள்ளதோ அதேபோல நாமும் அவைகளை  பராமரிப்பது அவசியம். காடு  ற்றும் வீட்டில்  உள்ள மரக்கன்றுகளையும், மரங்களையும் அழிக்கக்கூடாது.இவைகளை விதைக்கொட்டைகளை இட்டும், கன்றுகளை நட்டும்,  பதியம் போட்டும் மரமாக வளர்க்கலாம்.என்று கூறி முடிக்கிறேன் நன்றி.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்