கதை தொடர்-3

Action:

கதை பக்கத்தொடர்ச்சி-3.

மன்னர், இராஜா மற்றும் திருடன்.


திருடன்: நண்பா!  நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன் இப்போது இந்த மூன்றாவது  இரத்தினக்கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும் 50-50.வராது. இருவருக்கும் கூடுதலாகிவிடும். அதுமட்டுல்ல இதை  இவ்வளவு  நாளாக கஜானாவில் வைத்திருக்கும் மன்னனுக்கு ஒரு கல்லாவது திருடு போகாமல் இருப்பதே சந்தோஷம் என்று கொல்வாரில்லையா? அதற்காகத்தான் சொல்கிறேன்
            இராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்பு கொண்டு  வீடு திரும்பலாம் என்றார்.
திருடன் விடை  பெற்று சென்ற போதும் அவனுக்குத்  தெரியாமல் அவனைப்  பின் தொடர்ந்து  எங்கே வசிக்கிறான் என்பதை தெரிந்து கொண்டார். மறுநாள்  அரசவை கூடியது.
    இராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு  நமது அரண்மனை கஜானாவில் திருடு  நடந்திருப்பதாக நம்முடைய உளவாளிகள் எனக்கு தகவல் தந்துள்ளனர்.
நிதி  அமைச்சர் : மன்னர்  மன்னவா!  சிறிது நேரத்திற்கு முன்பு  நாங்கள் மந்திரிசபை கூட்டம்  நடத்தினோம். அதில் கூட யாரும் இதைப்பற்றி  சொல்லவில்லை. இதோ உடனே சென்று பார்த்து விட்டு  அறிக்கையை சமர்ப்பிக்கிறேன்.
      அவர் கஜானாவுக்குச் சென்று பார்த்ததில்  திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதை கண்டார். திடீரென்று  அவருக்கு பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடித்து வைத்துக் கொண்டார். அரசவைக்கு ஒடோடி வந்தார்.
நிதியமைச்சர்:மன்னரே, நமது உளவாளிகள் மிகவும்  திறமைசாலிகள் அவர்கள்  சொன்னது சரியே ராஜா  விசுவாசிகள். கஜானாவில் உள்ள ஒருபெட்டி உடைக்கப்பட்டு மூன்று,    மாணிக்கக் கற்கல்  திருடப்பட்டு இருக்கினறன.
        இராஜா அப்படியா! ஒரு கல்லைக் கூட விட்டுச்  செல்ல வில்லையா?.
     நிதியமைச்சர் மன்னவா! திருடர்கள் என்ன முட்டாள்களா? ஒரு கல்லையாவது விட்டுச்செல்வார்களா?  இதையெல்லாம் சுருட்டுவது தானே அவர்கள்  தொழிலின் திறமை.
   இராஜா போகட்டும்  எனக்கு  மேலும்  ஒரு உளவுத்தகவல்  வந்துள்ளது. "யார் அங்கே? "  "காவலர்கள் எங்கே?" என்றார். அவர்கள்  ஓடோடி வந்து மன்னவன் முன்பு நிற்க நான் கூறும் முகவரியில் உள்ளவனை பிடித்து அழைத்து வாருங்கள். அவனை வேறொன்றும்  செய்து விடாதீர்கள் என கூறி  அனுப்பினார். இக்கதை மீண்டும்  தொடரும்......நன்றி. நன்றி.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்