கதை

Actions:

திருடன் மற்றும்  சாமியாரை பற்றிய ஒரு கதை கட்டுரை.



கதைதத்தொகுப்பு:

திருடன் மற்றும்  சாமியாரின் கதை.
ஒரு ஊரில் திருடன் ஒருவன்  இருந்தான்.அவன் தினமும்  திருடப்போவதற்கு முன்பு  கோவிலுக்குள் நுழைந்து "சாமி" இன்றைக்கு  எனக்கு "நல்ல வருமானம்"  கிடைக்க வழிகாட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான். அவ்வாறு  செய்யும் பொழுது  அங்கே  சாமியார் ஒருவர் கோவில் மண்டபத்தில் அமர்ந்து தினமும் ஒரு  உபந்நியாசம்  ஆற்றுவது வழக்கம். சில நேரம்  அங்கிருக்கும்  கூட்டம் சிறிப்பபதை கேட்டு நாமும் சாமியார் சொல்லும்  "ஜோக்"-ஐ கேட்போமே என்று போவான். நல்லதொரு குட்டிக்கதை சொன்னால் அதை கேட்டுவிட்டு திருடப் போவான்.
                ஒரு தினம் திருடனுக்கு  பூர்வ ஜென்மம் வாசனையால்  "ஞானோதயம் "
ஏற்ப்பட்டது. பகற்பொழுதில் சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று  "குருவே வணக்கம்"  எனக்கு ஒரு "மந்திரம்".கற்றுத்தாருங்களேன் என்றான். சாமியாரும்  மகனே "நீ யார்" என்று கேட்டார். நானோ மிகப்பெரிய "பக்காத்திருடன்"  பத்து வயது முதல்  திருட்டுத்தொழில் தான் செய்கிறேன் என்றான்.
                      சாமியார்: அடக்கடவுளே! வேறு  எதுவும் " நல்ல தொழில்" .செய்யக்கூடாதா? என வினவினார்?.
திருடன்:  இப்போதைக்கு எனக்குத் தெரிந்த ஒரே தொழில் இதுதான் என்றான்.

வேறு  எதுவும் " நல்ல தொழில்" .செய்யக்கூடாதா? என வினவினார்?. சாாமியார்.

திருடன்:  இப்போதைக்கு எனக்குத் தெரிந்த "திருட்டுத்தொழில்" ஒன்று  தான்.   இது ஒன்றுதான். என்னுடைய மணைவி பிள்ளைகளை காப்பாற்ற கடடந்த 30 ஆண்டுகளாகச் செய்யும் "தொழில்"இதுததான் எனக்கூறினான்.
சாமியார்:  சரி போ, நீ உண்மையை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன்.   வேதத்திலுள்ள எஎல்லோருக்கும் சொல்லித்தரும்  முதலாவது மந்திரத்தை உனக்கும்  போதிக்கிறேன். அதை நீ பின்பற்றினால்  '"அந்த மந்திரம்"  பலித்து சிலவகை அற்புதங்களை செய்யும்.
திருடன்: சரிங்க சாமி அப்படியயே செய்கிறேன் என்றான்.
சாமியார்:முதல் மந்திரம் ".சத்தியம்  வத" அதாவது  " உண்மையே பேசு" .
திருடன்:  சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம் ஆகா  பின்பற்றுவதும் எளிது கைகள் தானே திருட்டுத்தொழில் செய்யும்     வாய்  "உண்மையை  பேசுவது"  ஒன்றும் கடினமில்லையே  என்றான்.
சாமியார்: புன்னகை  பூத்து  சிரிப்புடன்  சென்றுவா மகனே என்று கூறினார். திருடனும் ஆரவாரத்துடன்  தன்னுடைய வீட்டிற்குச்  சென்று  நடந்ததை மணைவியோடும், பிள்ளைகளோடும் சொல்லி  மகிழ்ந்தான் என்பதை கூறி  உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்  நன்றி. "

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்