கதை தொர்ச்சி

Actions:

கதையின் முன்பக்க தொடர்ச்சி...
சாமியார், திருடன் மற்றும்  ராஜா-வின் கதை.


                    திருடன்  வீட்டிற்கு போய் சாமியாருடன் நடந்த உரையாடலை தன் மனைவியிடம் கூறினான். அவளுக்கு ஒரே சிரிப்பு. இது என்னங்க நெசவாளி குரங்கு  வளர்த்த கதையாக இருக்கு? என்றாள் .
           அது என்னனாடி? கதை என்றான். ஒரு நெசவாளி  குரங்கு  வளர்க்க ஆசைப்பட்டு அதை வாங்கினானாம் . அந்த குரங்கு  அவன் செய்த வேலையை அதாவது  ஒவ்வொரு  துணியையும் நூல்நூலாக பிய்த்துப் போட்டதாம். அதேப்போல நீர்  உண்மைய பேசினால் திருட்டுக்குமுன்பே அகப்பட்டு விடுவாய் என்றாள்.
"கண்மணி" கவலைப்படாதே.
                "குருவருள் "
கிட்டும் என்று சொல்லி புறப்பட்டான்.
இரவு நேரம்  நெருங்கியதும் கன்னக்கோல், நூலேணி,  சுத்தியல்,  கடப்பாரை,  அளவுபார்க்கும் நூல் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போனான்.
            இன்று உபநேசம் இருப்பதால்  பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரிய வேண்டுமென எண்ணி அரண்மனையில் திருடப்போனானன். நல்லிரவுக்குப்பின் கும்பிட்டு  அரண்மனை மதிலைச்  சுற்றி  வருகையில் அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறுவேடத்தில் அங்கே  வந்தார்.
          இந்து  சமய இராஜாக்கள்  நாட்டு மக்களின் நாடி  பிடித்து பார்க்க இப்படி நல்லிரவில் மாறுவேடம்  அனிந்து நகர் வலம்புரி வருவதுண்டு.
         அப்போது  இராஜஅவனைப்பார்த்து "நில்" யார் அங்கே  என்றார்?
         திருடன் ஐயா நான்"பக்காத்திருடன்"
 இராஜா  அட" நானேஒருபக்காத்திருடன
அசலூரிலிருந்து வந்திருக்கிறேன்  எனக்கும் பணம் தேவை.நானும் உன்னுடன் வரட்டுமா?  பங்கில் பாதி கொடுத்தால் போதும் என்றார்.
        திருடள் மிகவும் நல்லது வாருங்கள் போகலாம் என்றான். இராஜாவுக்கு அவரது அரண்மனை வாயிலெல்லாம் அத்துபடி  என்பதால் திருடனை நேரே கஜானவுக்கு அருகில்  அழைத்துச் சென்றார்.
             இவர்கள் இருவரும் ஒரு பெ.ரிய பெட்டியை திறந்தார்கள்.அதில்  மூன்று  விலை உயர்ந்த பெரிய மாணிக்க கற்கள் இருந்தன.
          திருடன் இராஜாவிடம் இன்று  நமக்கு அதிர்ஷ்ட நாளாக உள்ளது. மூன்று மாணிக்க கற்களில் ஒன்று  எனக்கு, ஒன்று  உங்களுக்கு, மற்றொரு  கல்லை அதன் சொந்தக்காரனுக்காக இந்த பெட்டியிலேயே வைத்தவிடுவோம்
            இராஜா அட உனக்கு என்ன பைத்திமா? நாம்ளே ஒரு திருடர்கள். இதுலவேற சொந்தகாரனுக்கு ஒரு பங்கா? என்றார்.  நன்றி.தொடரும்......

   

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்