அரசன், ராஜா, அரண்மனை, மாணிக்கம், குதிரை, கஜானா, இவைகள் கதை பற்றி தெரியுமா?

Actions:  

அரசன்,  மன்னன்,  மற்றும் திருடன்
குதிரை மீது விறைந்து சென்ற காவலர் அந்தத் திருடனைப் பிடித்து வந்து அரசன் முன்பு நிறுத்தினார்.
நானும் இன்னொருவனும் உங்கள்  அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்து அதில் இருந்த மூன்று  மாணிக்க. கற்க்களில் எனக்கு ஒன்றும், என்னுடன் வந்தவனுக்கு மற்றொன்றும், மீதமுள்ள மற்றொரு கல்லை கஜானாவிலும் வைத்து விட்டு வந்து விட்டோம்.





     குதிரை மீது விறைந்து சென்ற காவலர் அந்தத் திருடனைப் பிடித்து வந்து அரசன் முன்பு நிறுத்தினார்.
திருடன்:ராஜா வணக்கமுங்க (நடுங்கிக்கொண்டே)
ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது என்று சொல என்றார்.

திருடன்: நானும் இன்னொருவனும் உங்கள்  அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்து அதில் இருந்த மூன்று  மாணிக்க. கற்க்களில் எனக்கு ஒன்றும், என்னுடன் வந்தவனுக்கு மற்றொன்றும், மீதமுள்ள மற்றொரு கல்லை கஜானாவிலும் வைத்து விட்டு வந்து விட்டோம். இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசன் முன்பு  மிகவும்   பயபக்தியோடு அளித்தான்.)
ராஜா:உன்னுடன் வந்தவன் வேறு யாரருமில்லை அது நான்தான்.மாறுவேடம் அணிந்து வந்து கஜானாவில் நுழைந்தேன்.இதோ நீ எனக்கு  பங்காக கொடுத்த மாணிக்க கல் (அரசனும்  அதை முதல் கல்லுடன்வைத்தார்.).நிதி  அமைச்சரே மூன்றாவது கல்லை வையுங்கள் என்று கூறினார்.
நிதியமைச்சர்: மன்னாதி  மன்னா! .என்ன அபவாதம்  இது? கடந்த மூன்று  தலைமுறையாக எங்கள் குடும்பம் தங்களுக்கு  சேவையகம்  செய்து  வருகிறது. சற்று பொழுதில்  என்மேல் திருட்டுப்பட்டத்தை ஏற்றி அசிங்கம்  பண்ணிகாரம் செய்து  விட்டீர்கள்.
அந்தக் கல்லையும் இந்த திருடன்தான் எடுத்திருப்பான்.எல்லா திருடர்களுக்கும் கண்கட்டுவித்தை தெரியும்  மன்னவா என்றான்
இராஜா: நிதியமைச்சரே இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த மாணிக்கத்தை எனது முன் சமர்ப்பிக்கத் தவறினால் உனது வேஷ்டியை அவிழ்த்து  சோதனை செய்ய உத்தரவு  பிறப்பிப்பேன்.
நிதி அமைச்சர்:  (நடுங்கிக்கொண்டே)  அவரது இருகரங்களை கூப்பி மன்னவா என்னை மன்னித்து விடுங்கள், அரை நாழிகை  பொழுதுக்குள் பேராசை என் கண்களை மறைத்து விட்டது. அந்த மாணிக்க கலை நான் எடுத்து மறைத்து வைத்திருப்பது உண்மைதான் என்று கூறி தன்னுடைய வேஷ்டியின் முடிச்சியிலிருந்து எடுத்து மன்னர் முன்னர் சமர்ப்பித்தார்.
உடனே ராஜா யார் அஙகே? (ஓடி வருகிறனர்) என  காவலர்களை அழைத்து
இந்த நிதியமைச்சரை  கைது செய்து  சிறையில் அடையுங்கள் .திருடனை அமைச்சர் பதவி உயர்வு  பெற தயாராகிக் கொண்டு வரும்படி  அழைப்பு விடுங்க ள் என்றார். வணக்கம் . தொடரும்...

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்